Gavitha / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையான 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வைத்து, அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றக்கூடாது எனத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம், ஹட்டன் நகரில், இன்று (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
இந்தப் போராட்டத்தில், “ஏமாற்றவேண்டாம்”, “வரவு-செலவுத்திட்டத்தில் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பளத்தை உள்வாங்கு”, “அத்தியாவசி பொருள்களின் விலை ஏற்றம்” போன்ற வசனங்கள் எழுதிய பதாதைகளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே, சுமார் 15 பேர் பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தின் பட்ஜெட் வாசிப்பின்போது, “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.
“இந்நிலையில் அந்த 1,000 ரூபாய் எந்த அடிப்படையில் வழங்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்படவில்ல. தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி கொண்டே வருகிறது.
“ஆகவே ஜனவரி முதல் வழங்குவதாக கூறப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளமானது, அடிப்படை சம்பளமாகவே இருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், அடிப்படை சம்பளமான 1,000 ரூபாய்க்கு மேல் சேர்க்கப்படல் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026