2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’அரசாங்கம் கட்டளையிட வேண்டும்’

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கம் கட்டளையிட வேண்டுமெனவும் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ''தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கிய  1000 ரூபாய் சம்பளம் வழங்கம் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் அரசாங்கம் தோற்றுப்போய்விடும்.'' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X