Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். கிருஸ்ணா
கல்வியை தொடர முடியாதுள்ள மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது
என்பது, கவலையளிப்பதாக உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொது
செயலாள௫ம் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பி.கல்யாணகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்று இன்று இரண்டு வருடம் பூர்த்தி ஆகின்ற நிலையில், பாடசாலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. வருடத்துக்கு ஒருமுறை விடுமுறை கழித்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு தாமதம் ஏற்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இரண்டு வருடம் என்பது ஒரு பாரிய இடைவழியாகும். இணையதளம்
ஊடான கற்பித்தல் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, ஆசிரியகளின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, கல்வி தொடர்பில் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .