Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
“அரசியல் என்பது, எவரதும் தனிப்பட்ட பரம்பரைச் சொத்தல்ல. எனது மகன் அல்லது மகளை அரசியலில் ஈடுபடுத்தும்படி சிலர் கூறுகின்றனர். அவ்வாறு செய்ய வேண்டுமெனில், அரசியல் என்பது ஒருவரின் தனிச்சொத்தாக இருக்க வேண்டும். எனது பெற்றோரின் சொத்துகள் எனக்கு வந்து சேர்ந்ததைப் போன்று அரசியலையும் நினைக்க முடியாது” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கண்டி மேல்நாட்டு கலைச்சங்க மண்டபத்தில், திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் கூறிய அவர்,
“பொதுமக்களே தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். எனது பரம்பரையை காரணம்காட்டி நான் அரசியலில் உயரிடத்தை பிடித்ததாக கருத வேண்டும். மக்களின் தெரிவாலேயே, நான் அரசியலில் உயர்ந்த இடத்துக்கு சென்றேன். மறைந்த அரசியல்வாதியான ஹெக்டர் கொப்பேகடுவின் கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் ஐந்து வருடங்கள் சேவையாற்றினேன். அதனூடாக நான் பல்வேறு அரசியல் பாடங்களையும் கலாசார விடயங்களையும் தெரிந்து கொண்டேன்.
“மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் பிரவேசம் மக்களின் கைகளிலேயே உள்ளது. எனவே, பொருத்தமான, சிறந்தத் தலைமையை உருவாக்குவதற்கு நாம் வழிகாட்டல் வேண்டும்.
“எனது வியாபரத்தை எடுத்துக்கொண்டால் அது இயல்பாகவே என் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரும். அதுபோல அரசியலையும் எதிர்பார்க்க முடியாது. சில சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் எனது மகனை பற்றி எழுதுகிறார்கள். அவ்வாறு எழுதுவதை விட்டுவிட்டு, நாம் நல்ல தலைவர்களை உருவாக்க முன்வர வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago