Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 31 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே , மேற்படி சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பதுளைக்கு அண்மையிலுள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரே, இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியருக்கெதிராக , சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ஆசிரியருக்கு எதிராக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆசிரியரின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானதாகும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசியல் பின்னணியொன்றின் அடிப்படையிலேயே, ஆசிரியரின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இச் செயற்பாட்டிற்கு எதிராக, தொழிற்சங்க நடவடிக்கைளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago