2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அலைபேசி பயன்படுத்த தடை

Sudharshini   / 2015 நவம்பர் 11 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை நேரங்களில் அலைபேசியைப் பயன்படுத்துவதுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

வியலுவ நவோதயா மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய தொழிற்நுட்ப விஞ்ஞானகூடத்தைத் திறந்துவைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தீபாவளி தினமான கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில், அலைபேசியைப் பயன்படுத்துவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தடைவிதிக்கப்படும். இதற்கான சுற்றறிக்கையை ஊவா மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அனுப்புமாறு கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளேன்' என்றார்.

மேலும், 'பாடசாலை நாட்களில், ஆசிரியர்கள் கொண்டுவருகின்ற அலைபேசிகளை, பாடசாலை ஆரம்பமாகியவுடன் அவற்றை அதிபரிடம் கையளிக்கவேண்டும். பாடசாலை நிறைவடைந்தவுடன் அதனைப் பெற்றுச்செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை நேரங்களில், மிகமிக முக்கியமான தகவல்களை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவேண்டுமாயின் அதனை அப்பாடசாலை அதிபரின் அலைபேசிக்குத் தெரிவிக்க முடியும் என்றும் முதலமைச்சர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .