2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஆக்ர-ஊவா பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம்

Sudharshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, கு.புஷ்பராஜ்

மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள அக்கரப்பத்தனை, ஆக்ர-ஊவா ஆரம்பப் பாடசாலைக்கு, சனிக்கிழமையன்று (6) திடீர் விஜயம் மேற்கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், அப்பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

மேலும், அப்பகுதிகளில் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள  மக்களின்  குறை, நிறைகளை அவர் கேட்டறிந்துக்கொண்டதோடு, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வோரின் பிரச்சினைகளைத் தீர்க்க  நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .