2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆசிரியரின் இடமாற்றத்தை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், எஸ்.சுஜிதா

லிந்துலை, பம்பரக்கலை விவேகலையா பாடசாலையில், கடந்த 7 வருடங்களாக தமிழ்ப் பாட ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் நேற்று, பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“போராடுவோம் போராடுவோம்  எங்கள் ஆசிரியர் எங்களது பாடசாலையிலேயே இருக்க அனுமதி கொடுக்கும் வரை போராடுவோம்”, “7 வருடங்களாக எங்களுக்கு கற்பித்த ஆசிரியரை வெளிப்பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்”, “தரம் 11 வகுப்பாசிரியரை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்தால் பெற்றோர்களாகிய எங்களது நடவடிக்கை கடுமையானது” வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் இடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும்,  தீர்வுக் கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கூறினர்..

இந்தப் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .