Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தன்னுடைய முழுமையான ஆதரவினை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரைத்த அவர், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் ஆசிரியர்களின் இப்போராட்டத்துக்கு தன்னுடைய முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு, விரைவில் தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கடந்த 24 வருட காலமாக இப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. ஆனாலும்
இன்றளவும் நிலையான ஒரு தீர்மானம் எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும் என்றார்.
ஆசிரியர்கள் நிகழ்நிலை கற்பித்தலிலி இருந்து விலகி உள்ள நிலையில், ஆளும் தரப்பில் உள்ள சில உறுப்பினர்கள் ஆசிரியர்களின் இச்செயற்பாட்டை மிகவும் மோசமாக சித்தரித்து ஆசிரியர்களின் மனதை பாதிப்புக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இச் செயற்பாட்டுக்கு, தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago