2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

சிவாணி ஸ்ரீ   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில், கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்புகளில் வெற்றிடமாக உள்ள பாடங்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை, இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறுமென, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேற்படி போட்டிப் பரீட்சை நடத்துவது தொடர்பில், சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தர வகுப்புகளில் வெற்றிடமாக உள்ள பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் இணைத்து கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதற்கமைய, நேர்முகப் பரீட்சைக்கு 3,500 விண்ணப்பதாரிகள் தோற்றவுள்ளனர்.

“மேற்படி போட்டிப் பரீட்சை, இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், இரத்தினபுரி தர்மபால வித்தியாலயம், கேகாலை ஸ்வர்ண ஜயந்தி வித்தியாலயம் ஆகியவற்றில், அன்றைய தினம் (27) காலை முதல் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

“போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனம் விரைவில் வழங்கவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பின்னர், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உயர்தர வகுப்புகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்" எனக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .