2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா கோட்டக்கல்வி இரண்டாம் வலயத்துக்கு உட்பட்ட லிந்துலை நாகசேன  ரோயல் கல்லூரி ஆரம்ப கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை  கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஜேசுதாஸன் தலைமையில்    சனிக்கிழமை (01) இடம்பெற்றது.

இக் கல்லூரியில் 2022 ஆம் வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் சித்தி பெற்ற மாணவர்களுக்கு  பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில் கல்வி சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்து ஓய்வு பெறும் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி ந.தமிழரசியின் சேவையை பாராட்டி கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  அதிதிகளாக  நுவரெலிய கல்வி வலயத்தின் உதவி பணிப்பாளர் எம்.கணேஷ்ராஜ், நிகழ்வின் அனுசரணையாளரான  வெஸ்டர்ன் மென்பவர் நிறுவன தலைவர் திருமுடி ரகு பங்கேற்றிருந்தார். அத்துடன் அயல் பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .