2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Janu   / 2024 ஜூலை 02 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள வடிக்கால் ஒன்றின் 10 அடி பள்ளத்திலிருந்து ஆணின் சடலம் செவ்வாய்க்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளது.  

திம்புள்ள, பத்தனை பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 

இறந்தவர் முதியோர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும்,  சம்பவம் தொடர்பான விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 துவாரக்ஷான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X