Kogilavani / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற நிலையில், அதனையொட்டி விசேட நிகழ்வுகள், பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று முன்தினம் (2) நடைபெற்றது.
இதற்கமைவாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி, நிர்வாகம் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கென அமைக்கப்பட்ட 'சரசவிகம' வீடமைப்புத் திட்ட வீடுகளின் திறப்புகள் கையளிக்கப்பட்டன.
3,400 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சரசவிகம வீடமைப்புத் திட்டத்திட்டத்தில், 49 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் உரியவர்களிடம் வீட்டுத் திறப்புகள் கையளிக்கப்பட்டன.
அத்துடன் பல்கலைகழக வளாகத்தில், 290 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சமூக மொழிபீடத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உதய ரத்னாயக்க, உதவித் தபால் அதிபர் ராஜித ரணசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

23 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
52 minute ago