2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டத்துக்கு குதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மிதந்தனர்

Niroshini   / 2017 மார்ச் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இரண்டு ஏக்கர் காணி உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கண்டி மாவட்டத்திலுள்ள தோட்ட தொழிலாளர்கள்  இன்று ஆர்ப்பாட்டத்தில் சில ஆண்கள் போதையில் இருந்ததாகவும் அவர்கள் கட்டுக்கோப்புகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கம், பேராதனை கலகா சந்தியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தது.

கலஹா, தெல்தோட்டை, புபுரஸ்ஸ மற்றும் லிட்டில்வெலி ஆகிய கண்டி தெற்கு பெருந்தோட்டங்ளைச் சேர்ந்த சுமார் 1,500 தொழிலாளாகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள், கண்டி - கொழும்பு பிரதான பாதையை கலஹா சந்தியில் மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் இடைக்கிடை போக்குவரத்து தடைப்பட்டது.

விவசாயத்துக்காக இரண்டு ஏக்கர் காணியும் வீடு கட்ட 20 பேச்சர்ஸ் காணியும் வேண்டும் தோட்டக்காணிகள் வெளியாருக்கு வழங்கப்படக்கூடாது, பயன்தரு மரங்களை வெட்டக் கூடாது, 15 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும், ஈ.பி.எப்.கட்டணத்தைச் செலுத்த வேண்டும், உள்ளிட்ட 7 தொழிற்சங்க கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்களில் சிலர் போதையில் இருந்ததாகவும் இதனால் அவர்கள் அடிக்கடி கட்டுக்கோப்புகளை மீறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பொலிஸார் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .