Kogilavani / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால், மஸ்கெலியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியாவுக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை கோரி, இன்று ஞாயிற்றுக்கிழமை, மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்தனர். இந்நிலையில் மஸ்கெலியா பொலிஸார், பொது சொத்துகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தினால் இவ்வார்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவை பெற்றுகொண்டனர்.
மஸ்கெலியா நகரத்தில் போராட்டத்தை முன்னெடுக்க வந்த தொழிலாளர்கள், நீதிமன்ற தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் நகரத்தில் ஆங்காங்கே ஒன்றுதிரண்டுள்ளனர். பாதுகாப்பு கருதி பொலிஸாரும் மஸ்கெலியா நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகரில் ஒன்றுதிரணட்டுள்ள மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாமென பொலிஸார் ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago