2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆறு மாத குழந்தை உட்பட இருவரின் சடலங்கள் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், செ.தி.பெருமாள்

 

கொட்டக்கலை, ரொசிட்டா  புதிய குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, ஆறு மாத குழந்தை உட்பட இருவரின் சடலங்களை, திம்புள்ளை பத்தனை பொலிஸார் இன்று(27) காலை மீட்டுள்ளனர்.

 

இதேவேளை குழந்தையின் தந்தை, கத்திக்குத்து காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கிருஷ்ணசாமி நித்தியகல்யாணி (வயது 26,  சந்திரகுமார் சசீந்தன் ( ஆறு மாத குழந்தை ) ஆகியோரே உயிரிழந்ததுள்ளனர்.

 கழுத்து நெறிக்கப்பட்டு  குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதென பொலிஸரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனகை்காக, வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .