2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஆறுமுகன் எம்.பி ’நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

இம்முறை, தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பெற்றுக்கொடுப்பாரென, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இன்று, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, பாரிய பிரச்சினையாக மாறியௌ்ளதென்றும் இது தொடர்பான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை, இணக்கப்பாடின்றி முடிவடைந்தாலும், நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி முன்னின்றுச் செயற்பாடுவார் என்றும் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை வைத்துக்கொண்டு, இன்று சிலர், தமது தலைவரை விமர்சித்து வருவதைச் சாடிய தவிசாளர், அவ்வாறான விமர்சனங்களால், இ.தொ.காவின் பலத்தை யாராலும் உடைத்து எறிந்துவிட முடியாதென்றும் தெரிவித்தார்.

மலையக மக்களின் வாக்குரிமைகளை, தாங்கள் மட்டும் பெறவில்லை என்று கூறிய அவர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களே என்பதை நினைவூட்டியதுடன், எனவே, இ.தொ.காவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .