2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆற்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 ஜூலை 14 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

கிளாஸ்கோ - ஆகுரோவா தோட்டத்தின்  ஊடாக, மேல் கொத்தமலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆக்ரோயா  ஆற்றில் இருந்து சடலம்  ஒன்று மீட்கப்பட்டது.

 இவ்வாறு மீட்கப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தாயான 63 வயதான அலமேலு ராஜம்மா என  பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த பெண், இன்று காலை ஆறு மணி அளவில் வீட்டிலிருந்து மலசல கூடம்  சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். 

வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆற்றில் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு  பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனை அடுத்து பொலிஸார்சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டனர்.

குறித்த பெண் ஆற்றில் தவறி  விழுந்து இறந்துள்ளமை  விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் .

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X