2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

ஆற்றுக்கு குளிக்கச் சென்றவர் வலிப்பு ஏற்பட்டு மரணம்

Gavitha   / 2020 நவம்பர் 26 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ப்ரௌண்சீக் தோட்ட எமலீனா பிரிவில், நேற்று (25) பிற்பகல், ஆற்றுக்கு நீராடச் சென்ற நபர், வலிப்பு ஏற்பட்டமையால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கோவிந்தன் கமலேஸ்வரன் எனும் 33 வயது நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலமொன்று ஆற்றில் கிடப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட சடலம், டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதே, அவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X