2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ஆற்றை அகலப்படுத்தவும்’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா கந்தப்பளை பகுதியில், விவசாய நிலத்தையும் அதனை அண்டிய குடியிருப்புப் பகுதிகளையும் பாரிய பாதிப்புக்குள்ளாக்கும் ஆற்றை, அகலப்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தப்பளை பாக்குத் தோட்ட பச்சை வனப்பகுதியிலிருந்து ஆரம்பமாகும் காட்டாறு, கந்தப்பளை நகர் மற்றும் கிராமப்பகுதியின் ஊடாக, கல்பாலம் வரையில் சுமார் ஏழு கிலோமீற்றர் வரை செல்கின்றது.

மழைகாலங்களில் இந்த ஆறு பெறுக்கெடுப்பதால், கந்தப்பளை நகரை அண்டிய கிராமவாசிகளினதும் பாக்குத் தோட்ட மக்களதும் விவசாயக் காணிகள் மற்றும் விவசாய செய்கைகள் பாதிப்படைகின்றன.

இதனால் இப்பகுதியில், பாரியளவில் விவசாயப் பயிர்கள் பாதிப்புக்குள்ளாவதுடன், மண்ணரிப்பும் ஏற்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட விவசாயத் திணைக்களம் மற்றும் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சு என்பனவற்றின் கவனத்துக்குக் கொண்டுச்சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆற்றை அகலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .