2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஆலமரக் கிளை முறிந்து குடியிருப்புகள் சேதம்

Freelancer   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலங்கந்த  தோட்டத்தில் 14 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்புக்குப் பின்புறத்தில் உள்ள முனியாண்டி ஆலயத்தில் காணப்படும் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததால் குடியிருப்பு வீடுகள் சேதமாகியுள்ளன.

‌நேற்று (04) இரவு 12 மணி அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சமையலறைகள், மலசலகூடம்  உட்பட  மூன்று வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அத்தோடு இப்பகுதியில் உள்ள 9 மின்சாரக் கம்பங்கள் சேதமாகியதுடன், இரவுமுழுவதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் இங்கு வாழும் 14 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் பாதிக்கப்பட்டனர்.

வீட்டிலிருந்தவர்களுக்கு காயங்களோ, உயிராபத்துக்கயோ ஏற்படவில்லை என்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மின்சார கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்சார கம்பங்கள் நடுவதற்கு லிந்துலை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X