Editorial / 2026 மே 01 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைமையகமான ‘சௌமியபவனில், இன்று மே தினக் கொடியேற்றும் நிகழ்வு கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செந்தில் தொண்டமான் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்ததுடன், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்குத் தனது மே தின வாழ்த்துகளையும்த் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இவ்வருடத்திற்கான மே தின நிகழ்வுகள் தோட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் நிலவியபோதும், இவ்வாறே தோட்ட வாரியாக மே தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதும், யுத்தத்தின் உச்சக்கட்ட காலத்திலும், கொரோனாத் தொற்றுக் காலத்திலும் மற்றும் அண்மைய பொருளாதார வீழ்ச்சியின் போதும் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காமல், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் கருத்திற்கொண்டே இ.தொ.கா.வின் மே தினக் கூட்டங்கள் தோட்ட வாரியாக நடத்தப்பட்டன.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா, பதுளை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எமது உறுப்பினர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளன. எனவே, கட்சியின் அரசியல் பிரமுகர்கள், அமைப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் தலைமையில், அந்தந்தத் தோட்டங்களிலேயே தொழிலாளர்களுடன் இணைந்து இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மலையக மக்களின் உரிமைகளை இதுவரை காலம் பெற்றுக்கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில், எதிர்காலத்திலும் மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், புதிய உரிமைகளை வென்றெடுப்பதிலும் இ.தொ.கா. முன்னின்று செயற்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.





12 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
35 minute ago