Sudharshini / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மகாண சபையில் அமைந்துள்ள மாகாண சபை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்;து கருத்து தெரிவித்த அவர்,
'நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இ.தொ.கா, ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே தமது முழுமையான ஆதரவை வழங்கியது.
பலபோட்டிகளுக்கு மத்தியில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்றது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், கூடுதலான வாக்குகளில் வெற்றிபெற்றார். அத்தோடு, இ.தொ.கா உப தலைவர் முத்து சிவலிங்கமும் வெற்றி வெற்றுள்ளார். அப்படி வெற்றி பெற்றும் கூட ஆறுமுகன் தொண்டமானுக்கும் முத்துசிவலிங்கத்துக்கும் அந்தஸத்தள்ள அமைச்சுப் பதவியோ, பிரதி அமைசசு பதவியோ வழங்கப்படாதது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.
இலங்கையில் மிகவும் பலம் வாய்;ந்த தொழிற்சங்கமாக விளங்கும், இலங்கை தொழிலாளரு; காங்கிரஸ் மீது மலையக மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதை எவராலும் அசைக்க முடியாது.
இன்று இ.தொ.கா உருவாக்கிய மலையக அரசியல்வாதிகள் இன்று இ.தொ.கா.வில் இருந்து பிரிந்து சென்று, ஏனைய தொழிற்சங்கங்களில் இணைந்துள்ளதுடன் அதில் பலர் வேறு புதிய தொழிற்சங்கங்களையும் ஆரம்பித்துள்ளார்கள். ஆவர்கள்தான் இன்று இ.தொ.கா.வை விமர்சித்து வருகின்றார்கள்.
இ.தொ.கா.வில் இருந்து பிரிந்துச் சென்ற மலையக அரசியல்வாதிகள், அவர்கள் அரசியலுக்குள் வந்த ஆரம்பத்தை மறந்துவிட்டு தற்போது இ.தொ.கா.வை விமர்சித்து வந்தாலும்; இ.தொ.கா. மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எவராலும் அசைக்க முடியாது.
இலங்கை எவராலும் அசைக்க முடியாத மலையக தொழிற்சங்கமாக இ.தொ.கா விளங்கி வருகின்றது. ஒருகாலத்தில் இ.தொ.காவின் உதவி இன்றி பாராளுமன்றம் மற்றும் மாகாணசபைகளில் ஆட்சி அமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இவ்வாறான பலம்வாய்த இ.தொ.கா தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்பட்டு வருகின்றபோதிலும், அவருக்கு அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படாதது குறித்து மலையக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago