2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இ.தொ.கா இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை(10)அன்று நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். 

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்தியாஞ்சல் பாண்டே மற்றும் இந்திய இணை உயர்ஸ்தானிகர்(கண்டி) வீ.எஸ். சரண்யா ஆகியோரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில்,இருநாட்டு நட்புறவு, தொழிலாளர் நலன், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதன் போது இ.தொ.கா சார்பில் நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் சிவன் ஜோதி யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர் சின்னையா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .