Editorial / 2022 ஜூலை 15 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.பெருமாள்
நோர்வூட் பிரதேச சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு வரிசையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை எட்டி உதைத்து பந்தாடிவிட்டு, காத்திருந்த நபர் ஒருவரையும் எச்சரித்துள்ளார். அத்துடன் தனது இடுப்பில் மறைத்து வைத்தியிருந்த போத்தலை எடுத்து குத்துவதற்கு முயற்சித்ததுடன் தூசன வார்த்தைகளால் வசைபாடினார்.
பந்தாடிவிட்டு அச்சுறுத்தும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், அவர் மீது விசாரணை நடைப்பெறும் எனவும், அதுவரையிலும் அவரை, கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் இ.தொ.காவின் பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, எதிர்வரும் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

8 minute ago
24 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
35 minute ago
3 hours ago