Janu / 2025 ஜூன் 24 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் திங்கட்கிழமை(23) அன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.
இதன் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயராக இ.தொ.கா வின் சிவன்ஜோதி யோகராஜ், நுவரெலியா பிரதேச சபை தவிசாளராக வேலு யோகராஜ், அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளராக ரதிதேவி, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமனி பிரசாத் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அவர்கள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், முன்னிலையில் பதவி ஏற்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்களிடம் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago