R.Maheshwary / 2022 ஜூலை 20 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும், ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சிறந்த தீர்வாக ரணில் விக்ரமசிங்க இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் ஆதரவு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே ரணில் விக்ரமசிங்கவிற்கு இ.தொ.கா தனது முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
17 minute ago
28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
3 hours ago
3 hours ago