R.Maheshwary / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மலையக பகுதிகளில் ரொட்டி பிரதான உணவாக உள்ள நிலையில், தற்போது மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பை எதிர்த்து, அதனை குறைக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஆளுங்கட்சியிலுள்ள மலையக பிரதிநிதிகளுக்கு முதுகெலும்பில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.
மலையக மக்களுடைய வாக்குகளை பெற்று கொண்ட இராஜாங்க அமைச்சர், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தகுதியில்லாமல் இந்தியா சென்றுள்ளார். அன்று தந்தை செய்ததை இன்று மகன் செய்கிறார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இ.தொ.கா. இன்று, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே, மலையக பெருந்தோட்ட மக்களிடம் வாக்குகளை பெற்று கொண்டு, அமைச்சு பதவியில் இருக்கும் இ.தொ.கா.மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கி மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .