2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இ.தொ.காவைச் ​சேர்ந்த ஐவருக்கும் சரீரப்பிணை

மு.இராமச்சந்திரன்   / 2017 நவம்பர் 03 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்தின்

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மத்திய மாகாண சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் அடங்களாக ஐவரும், ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் சந்தேகநபர்களை விடுவித்த நீதவான் ஈ.சரவணபவன், வழக்கை, டிசெம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, ஹட்டன் நகர மத்தியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள், கடந்த 26ஆம் திகதியன்று, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட மணிக்கூடுச் சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றின் மீது இனந்தெரியாதவர் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால், அந்தக் கடையின் ​மேல்மாடியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியுள்ளது.

அந்த வர்த்தக நிலையம், அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவருடையதாகும். அந்தச் சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில், ஒருவரை திங்கட்கிழமையும், ஏனைய நால்வரையும் வியாழக்கிழமையும் கைதுசெய்தனர்.

திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், அன்றையதினமே, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவ்வனைவரும் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, அவர்களை நீதவான், சரீரப் பிணையில் விடுவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .