Sudharshini / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் நடத்துனர் ஒருவர், பயணி ஒருவரால் தாக்கப்பட்ட நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான பஸ், நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி சனிக்கிழமை (10) பயணித்துள்ளது. பஸ்ஸில் ஏறிய பயணி ஒருவர், நடத்துனரிடம் 1,000 ருபாய் பணத்தை கொடுத்து தனக்கான கட்டணத்தை எடுத்துகொண்டு மீதி பணத்தை தரும்படி கூறியுள்ளார்.
பஸ் நடத்துனர், பஸ் கட்டணத்தை எடுத்துக்கொண்டு, தன்னிடம் இருந்த சில்லறை பணத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுத்துள்ளார். மிகுதி பணத்தை சில்லறையாக வாங்க குறித்த பயணி மறுத்துள்ளதுடன் நடத்துனருடன் வாய்த்;தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே பஸ் நடத்துனரை அந்த பயணி, நானுஓயா பிரதேசத்தில் வைத்து தாக்கியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயணியை, கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பயணி, மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago