2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச பஸ்ஸிலிருந்து டீசலை திருட முயன்ற நடத்துனர் கைது

R.Maheshwary   / 2022 ஜூன் 12 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பசறையிலிருந்து மாத்தறைக்கு சேவையில் ஈடுபடும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து டீசலை திருட முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பசறை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை 6.30 மணிக்கு மாத்தறைக்கு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸிலேயே நேற்றிரவு இத்திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

 பதுளை- பசறை  இடைக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

35 வயதுடைய சந்தேக நபரான நடத்துனர்,  இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X