Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 30 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன்
டயகம நகரத்திலிருந்து தினமும், அதிகாலை 5.00மணிக்கு கண்டி செல்லும் பஸ் வண்டியும், காலை 10.30 மணிக்கு நுவரெலியா செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் கடந்த சில நாட்களாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பஸ்களில் அதிகமானோர் கண்டி,பேராதனை நாவலப்பிட்டி ஆகிய பிரதான வைத்தியசாலைகளுக்கு நோயளர்களை பார்ப்பதற்கும் தங்களின் சிகிச்சைகளுக்கு சென்றதுடன், பாடசாலை மாணவர்கள், ஏனைய கடமைகளுக்கு செல்பவர்களும் இந்த பஸ் சேவையால் பயனடைந்தனர்.
இந்த நிலையில், தற்போது பஸ் சேவை இன்மையால் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இப்பிரதேச மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே குறித்த பஸ்களை, உடனடியாக சேவையில், ஈடுபடுத்த அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .