எம். செல்வராஜா / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து, பௌத்தம் ஆகிய இரு மதங்களும் ஒன்றுக்கொண்டு தொடர்புப்பட்டன என்றும் இந்துக்கள் புத்தரையும் பௌத்தர்கள் இந்து தெய்வங்களையும் வணங்கி வரும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் சுட்டிக்காடிய இந்து சமய அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற அமைச்சர் மனோ கணேசன் இப்பரஸ்பர நல்லுறவும் ஒற்றுமையும், புரிந்துணர்வும் மென்மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பதுளை நாரங்கலை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ முத்து விநாயகர் கோவிலின் சுவாமி சிலைகளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
எமது நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லுறவுகளும் சகவாழ்வும், ஒற்றுமையும், ஐக்கியமும் மேலோங்க வேண்டும் என்றும் இதனை அனைத்து இனங்களும் புரிந்துகொண்டு செயல்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வறுமை, அறிமையாயைப் பயன்படுத்தி, எமது மக்களை மதம் மாற்றும் செயல்பாடுகளில் சிலர் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவ்விடயத்தில், எம்மவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதுடன், “எமது மதத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆலயங்கள் சிறப்புற இயங்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். .
“கோவில்கள் தோறும் அறநெறிப் பாடாசாலைகள் செயற்படல் வேண்டும். அறநெறிப் பாடசாலைகளுக்கு, தத்தமது பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும். எமது மதத்தின் மகத்துவம், பாரம்பரியம், விழுமியங்கள், பாதுக்கப்படல் வேண்டியது அவசியமாகும். இதனை எம்மவர்கள் தத்தமது கடமைகளாகக் கருத வேண்டும்” என்றார்.
மலையக மக்களுக்கென்று, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற ஏகோபித்த அமைப்பு செயல்படுவதாகவும் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், இக்கூட்டணி இயங்கி வருவதாகவும் இக் கூட்டணியின், பதுளை மாவட்டத் தளபதியாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago