Freelancer / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பசறை வலய கல்விக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் சர்வ மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நோன்பு துறத்தல் நிகழ்வு பசறை வலயக் கல்விக் காரியாலயத்தின் பணிப்பாளர் திருமதி. எம்.ஏ.சரீனா பேகம் தலைமையில், பசறை புதிய வாசிகசாலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை இடம்பெற்றது.
பசறை ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகம், ஜமயத்துல் உலமா கிளை, பசறை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள், நகர முஸ்லிம் வர்த்தக சமூகத்தினர் மற்றும் கல்விப் புலத்தில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பசறை பகுதியிலுள்ள சர்வமதத் தலைவர்கள், கல்வி சமூகத்தினர், திணைக்கள உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
33 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago
48 minute ago