Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
லிந்துலை, தங்கக்கலை தோட்டத் தொழிற்சாலையியில் வைக்கப்பட்டிருந்த பழைய இயந்திரங்களை, தொழிலாளர்களின் அனுமதியின்றி தோட்ட நிர்வாகம் வெளியாருக்கு விற்பனை செய்ய முயற்சித்ததால், தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில், சனிக்கிழமை முறுகல் நிலை ஏற்பட்டது.
மேற்படித் தேயிலை தொழிற்சாலையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் அகற்றப்பட்டதுடன், புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.
இவ்வாறு அகற்றப்பட்ட பழைய இயந்திரங்களை, தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் அனுமதியின்றி வெளியாருக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளது.
இதற்கமைவாக, இயந்திரங்கள் அவசர அவசரமாக லொறிகளில் சனிக்கிழமை காலை, ஏற்றப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொண்ட தோட்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி இயந்திரங்களை தமக்கு தெரியாமலேயே தோட்ட நிர்வாகம் விற்பனை செய்ய முற்பட்டதாகவும் இயந்திரங்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை, முழுமையாக தோட்டக் கம்பனியே அனுபவிக்குமென்றும், தொழிலாளிக்கு எவ்வித இலாபமும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“பகல் வேளையில் இயந்திரங்களை கொண்டுசெல்ல முற்பட்டமையால் எம்மால் இதனைத் தடுக்க முடிந்தது. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இரவு வேளைகளில் முன்னெடுக்கப்படுமாயின் அதனை எம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? என தொழிலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக, தங்கக்கலை தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில்,“எதிர்காலத்தில், தங்கக்கலை தோட்டச் சொத்துகளை தொழிலாளர்களின் விருப்பமும் அனுமதியுமின்றி விற்பனை செய்யமாட்டோம்” என, தோட்ட நிர்வாகம் உறுதியளித்தது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago