2025 ஜூலை 19, சனிக்கிழமை

இயந்திரத்தால் கால்கள் அறுத்துக் கொலை; சித்தப்பா கைது

R.Maheshwary   / 2022 ஜனவரி 31 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர் ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (30) இருவருக்கிடையில் வேலி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதால், ஒருவர் மற்றையவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு துண்டுகளாக்கியுள்ளார்.

இதனையடுத்து கால்கள் துண்டாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான திருமணமாகாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் சித்தப்பா என்பதுடன், இவர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும்  தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X