Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் இயற்கை வளங்களை அழியாது பாதுகாத்து நாட்டின் எதிர்காலத்தினை சிறந்த வழியில் இட்டுச் செல்வது மனிதர்களாகிய அனைவரதும் கடமையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் வன அடர்த்தியானது தற்போது 29 சதவீதமாக காணப்படுகிறது. இந்த அடர்த்தி சதவீதத்தினை 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'வனரோபா' தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக நடைபெற்ற தேசிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(11) கொத்மலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,
நாட்டிலுள்ள கள்ளக்கடத்தற்காரர்கள் பலர், நாட்டின் சுற்றுப்புறச் சூழலை அழித்து தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான தொழிலில் ஈடுபடுபவர்கள் பணத்தினை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். ஆனால், நாட்டைப் பற்றியோ நாட்டின் எதிர்காலம் பற்றியோ எந்தவித கவலையும் கொள்வதில்லை.
எனவே, இவ்வாறானவர்களின் நடவடிக்கைகளை குறைக்கும் முகமாக கடும் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் இயற்கை வளங்களை அழியாது பாதுகாத்து நாட்டின் எதிர்காலத்தினை சிறந்த வழியில் இட்டுச் செல்வது மனிதர்களாகிய அனைவரதும் கடமையாகும்.
ஆயினும், கடந்த சில வருடங்களில் காட்டு வளங்கள் எமது நாட்டில் அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இனிவரும் காலங்களில் வன அழிப்பினை நிறுத்தி வனாந்தரங்களின் அடர்த்தியை அதிகரித்து நாட்டின் எதிர்காலத்தினை சிறப்பாக அமைப்பது எமது கடமை என்றார்.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026