Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 15 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
2 வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இராணுவ இளவல் படையணி அதிகாரியின் சடலம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
குறித்த அதிகாரியின் உறவினர்கள், இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, வெலிவேரியா பொது மயான கல்லறையில் இருந்து திங்கட்கிழமை (15) தோண்டியெடுக்கப்பட்டது.
தோண்டியெடுக்கப்பட்ட சடலத்தின் எச்சங்கள், பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சன் பெர்ணான்டோ என்ற இளவல் படையணி அதிகாரி, தியத்தலாவை இராணுவ கல்வி பீட பயிற்சி வழங்கி வந்த சந்தர்ப்பத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி கொலைசெய்யப்பட்டார்.
அதன்பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டதாக வைத்திய பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்ததையடுத்தே, அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
10 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago