R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பத்து நாள்கள் நாடு முடக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், வருமானத்தை இழந்தவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானிதுள்ளதென தெரிவித்த, மலையக மக்கள் முன்னனி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன், இருப்பினும் அதனை பாரபட்சமின்றி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்தமுறை ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட்டபோது சில அதிகாரிகள் தமக்கு தேவையானவர்களுக்கு அத்தொகையை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஐயாயிரம் ரூபாயைப் பெற பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோல கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமலும் போனது. ஆனால் இம்முறை இவ்வாறு நிகழ கூடாது. முறையான ஒழுங்கமைப்பில், எவ்வித பாரபட்சமும் இன்றி வருமானத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago