R.Maheshwary / 2021 ஜூலை 11 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றால், மரமொன்று முறிந்து விழுந்ததால், லயக்குடியிருப்பின் இரண்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இன்று (11) அதிகாலை 2 மணியளவில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது வீடுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில், நல்லதண்ணி பொலிஸாரும், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026