R.Maheshwary / 2022 ஜூன் 29 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
69 இலட்சம் மக்கள் இரண்டு கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஸ்ணன், எனவே கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என்றார்.
நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கின்ற போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு விடயத்தையும் அலட்சியமாக பார்க்கவோ செயற்படவோ கூடாது. அப்படி செயற்பட்டதால்தான் இன்றைய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. வாக்களித்தவர்கள் மாத்திரம் அல்ல அனைவருமே இன்றைய நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எரிபொருளைக் கொண்டு வருவதற்கு எந்தவிதமான திட்டத்தையும் முயற்சி செய்யாமல் இன்று கட்டாருக்கும் ரஸ்யாவுக்கும் ஒடிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. தொடர்ந்தும் இந்த அரசாங்கம் வெளிநாடுகளில் கடன் பெறுவதை மாத்திரமே இலக்காக கொண்டு செயற்படுகின்றது.
எவ்வளவு காலத்திற்கு கடன் வாங்கி நாட்டை கொண்டு செல்ல முடியும்.எனவே நாட்டிற்குள் எங்களுடைய வளங்களை பயன்படுத்தி டொலர் கொண்டு வருவதற்கான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.அதனை விடுத்து தொடர்ந்தும் ஏனைய நாடுகளில் கையேந்திக்கொண்டு இந்த நாட்டை எவ்வளவு காலத்திற்கு முன் கொண்டு செல்ல முடியும் என கேள்வி எழுப்பினார்.
நாட்டில் நட்டத்தில் இயங்கும் அனைத்து துறைகளையும் சரியான திட்டமிடலுடன் தனியாருக்கு வழங்கி, நட்டமீட்டுகின்ற துறைகளை இலாபமீட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்றுமே அபிவிருத்தியை நோக்கி முன் செல்ல முடியாது என்றார்.
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago