உமாமகேஸ்வரி / 2020 மே 25 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் இருப்பதாக, கட்டட அகழ்வாராய்ச்சி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மண்சரிவு அபாயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கேகாலை மாவட்டத்தில் 2ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தை, இரத்தினபுரி, நிவித்திக்கலை, கலவான, எலபாத்த, பெல்மதுளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் புலத்கோப்பிட்டிய, அரநாயக்க, தெஹியோவிட்ட, கலிகமுக, ரம்புக்கன, மாவனெல்ல, யட்டயந்தோட்டை, ஆகிய செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழைப்பெய்யும் அறிகுறிகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக இந்த இரு மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழைப்பெய்யும் அறிகுறிகள் காணப்படுகின்றது. இதனால், இம்மாவட்டங்களில் வெள்ளம், மண்சரிவு அபாயம் அதிகமாகவே காணப்படுகின்றன.
எனவே, இம்மாவட்டங்களிலுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அரச அதிபர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இரத்தினரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை, வெள்ளம் கடுமையான காற்று காரணமாக 5,032 குடும்பங்களைச் சேர்ந்த 19,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் முற்றாக சேமடைந்துள்ளன.
1,872 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 29 குடும்பங்களை சேர்ந்த 117 பேர் 6 மத்திய நிலையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago