Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 மே 30 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில், நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முச்சக்கரவண்டிச் சாரதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி வீதியில், தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், கெடஹெத்தே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், சம்பவ தினத்தன்றே உயிரிழந்தார்.
இவ்விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025