Janu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனிவெளி ரயில் பாதையை அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் விரிவான திட்டமிடல் பணிகளுக்காக, ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
களனிவெளி ரயில் பாதையை இரத்தினபுரி வரை நீடிப்பது தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அதன் விரிவான வரைபடங்கள் மற்றும் திட்டங்களை தயாரிப்பதற்கும் 2025-10-21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
தேசிய போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் முறையின் கீழ் (National Competitive Bidding), இதற்கான விருப்பக் கோரல்கள் (Expressions of Interest) கோரப்பட்டிருந்தன. இதில் மொத்தம் 08 ஏலதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு
நிதி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், ஆலோசனை கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
இந்தக் கொள்முதல் பரிந்துரையை வழங்குவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .