Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 04 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சில தோட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக, இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என, தோட்டத் தொழிளாளர்கள் தெரிவித்தனர்.
இரத்தினபுரியின், காவத்தையிலுள்ள எந்தான தோட்டம் உள்ளிட்ட சில தோட்டங்களிலேயே, இவ்வாறு இராவத்தினர் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை கொழுந்து பறித்தல், தேயிலை மலை சுத்தப்படுத்தல், தேயிலை கொழுந்து நிறுத்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, தோட்ட மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் நியிமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு மேலதிகமாக இந்த இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த நியமனத்தால், தங்களுக்கு பல நன்மைக் கிடைப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கொழுந்து நிறுக்கும்போது, மேற்பார்வையாளர்களும் உதவி மேற்பார்வையாளர்களும் இதுவரை காலமும், பல காரணங்களைக் கூறி, நிறை குறைப்பு செய்து வந்தனர் என்றும் அத்துடன் குறிப்பிட்டளவு (18 கிலோகிராம்) கொழுந்து பறிக்காதவர்களுக்கு, அரை நாள் சம்பளம் வழங்கினர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சில நாள்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை கொழுந்து பறிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்தனர் என்றும் தற்போது அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை அனைத்தும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை, வெளியாரால் கைப்பற்றப்பட்டத் தோட்டக்காணிகளை, தோட்ட நிர்வாகங்களுக்கே வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவத்தினரின் இச்செயற்பாடு காரணமைாக, தோட்ட வேலைகளை கைவிட்ட பெரும் எண்ணிக்கையான தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் தோட்டத்தில் வேலையில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, இராணுவத்தினரின் வருகையால், தோட்டங்களில் தொழில் பிரச்சினை, இதர பிரச்சினைகள் குறைந்து, தேவைகளுக்காக தொழிற்சங்கங்களை நாடும் நடவடிக்கை குறைய வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago