Gavitha / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில், நேற்று (30) வரை, 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில், தற்போது 139 பேர் குணடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் லக்மால் கோனார தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இதன்போது, இரத்தினபுரி மாவட்டத்தில கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, ஒக்டோபர், நவம்பர் மாதத்துக்குள் 4,191 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026