2025 மே 12, திங்கட்கிழமை

இரத்தினபுரியில் ஒரே நாளில் 4 கொரோனா தொற்றாளர்கள்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி பொலிஸ் அதிகாரப் பிரதேசத்தில், ஒரே தினத்தில்,  நான்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்கள், வீதிகளில் நேற்று(26) முதல் முடக்கப்பட்டுள்ளன.

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய இரத்தினபுரி மல்வல எம்புல்தெனிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரத்தினபுரி பொலிஸ் அதிகார பிரதேசத்தின் எகொட, ஸ்ரீபாகம, உதுரு கிலீமல, தகுனு கி லீமல, கெட்டவல, மாபலான ஆகிய கிராமங்கள்  முடக்கப்பட்டன. 

மேலும் நேற்றுக் காலை முதல், குருவிட்ட ஹேனெகம - ஓலுகல வீதி, குருவிட்ட - ரத்துருகல ஆகிய  வீதிகளும் அவற்றில் உள்ளடக்கப்படும் சில கிராம பகுதிகளும் காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X