2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரியில் கடும் கட்டுப்பாடு

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்துக்குள் வரும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை உள்வாக்குவதில், கடும் பயணக் கட்டுப்பாடுளை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என, சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் கபில கன்னங்கர, இன்று (02) தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் கூட்டத்தில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இரத்தினபுரி மாவட்டத்தைச் சூழவுள்ள கொழும்பு, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்கள், கொரோனா அவதான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் எனவே, இப்பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் குறித்து கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படவுள்தாக அவர் கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்தில், 28 கொரோனா வைரஸ் தொற்றுகள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் கணிசமானவர்கள் பேலியகொடை மீன் சந்தை மற்றும் ப்ரெண்டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

எனவே இப்பிரதேச மக்களை கொரரோனா தொற்றிலிருந் து பாதுகாப்பதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதற்காக, இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது 10 கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

3 வீதிகள் மூடப்பட்டுள்ளன என்றுமு்17 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள சந்தைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங் கள் அனைத்தும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X