2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் மரணங்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு

Gavitha   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரே தினத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6ஆக அதிகரித்துள்ளது என, இரத்தினபுரி போதான வைத்தியசாலை நிர்வாகம், இன்று (05) உறுதிப்படுத்தியது.

நேற்று (04) நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின என்றும் உயிரிழந்தவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், இரண்டு சிற்றூழியர்கள் ஒன்பது நோயாளர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டமையால், இரத்தினபுரி வைத்தியசாலையில் 24ஆவது விடுதி மூடப்பட்டது.

பல ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையால், வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால், நோயாளர்களை அனுமதிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X