R.Maheshwary / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பொகவந்தலாவை நகரில் அமைந்துள்ள விடுதியிலிருந்து, மதுபான போத்தல்களை, மிகவும் சூட்சுமமாக தோட்டப்புற மக்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்ல முற்பட்ட குறித்த விடுதியின் உரிமையாளரான, நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டு, கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலுடன், தனிமைப்படுத்தும் ஊரடங்கு உத்தரவுக்கமைய, குறித்த விடுதியும் மூடப்பட்டுள்ள நிலையில், நேற்று (4) இரவு 10 மணியளவில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் விடுதியைத் திறந்துள்ளனர்.
அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மதுபான போத்தல்களை தோட்டப்புறங்களில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்ல தயாரானபோது, பொகவந்தலாவை பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தோட்டப்புறங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே, மதுபானங்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
எனினும், நேற்று (4) இரவே கடுமையான எச்சரிக்கையின் பின்னர் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என, பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago